ஜெய்ப்பூர்: ஏழாவது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் ஜெய்ப்பூரில் நேற்றிரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ், யு மும்பா அணிகள் மோதின.
ஆரம்பத்தில் இருந்தே பெங்களூரு அணி வீரர்கள் சிறப்பாக ஆடினர். இதனால் முதல் பாதி முடிவில் 17- 11 என்ற புள்ளிக் கணக்கில் பெங்களுரு முன்னிலை வகித்தது.
இரண்டாவது பாதியில் மும்பை அணி வீரர்கள் பொறுப்புடன் ஆடி புள்ளிகளை எடுத்தனர். இறுதியில், பெங்களூரு புல்ஸ் அணியினர் 35- 33 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றனர்.
19வது ஆட்டத்தில் ஆடிய பெங்களூரு புல்ஸ் அணி பெற்ற 10வது வெற்றி இதுவாகும். அத்துடன் புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. 18வது ஆட்டத்தில் ஆடிய யு மும்பா அணி சந்தித்த எட்டாவது தோல்வி இதுவாகும்.
மற்றோர் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை 51-31 என்ற கணக்கில் அபாரமாக வீழ்த்திய தெலுகு டைட்டன்ஸ் அணி ஆறுதல் வெற்றி பெற்றது.

