சோல்: கொரியப் பொது விருது பூப்பந்துப் போட்டியில் நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் ஜப்பான் வீரர் கென்டோ மோமோட்டோவிடம் இந்திய வீரர் காஷ்யப் தோல்வி அடைந்து வெளியேறினா்.
தென்கொரியாவில் உள்ள இன்சியோனில் கொரியப் பொது விருது பூப்பந்துப் போட்டி நடைபெற்று வருகிறது.
ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்திய வீரர் காஷ்யப் பாருபல்லி, இரண்டு முறை உலக வெற்றியாளரும் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ளவருமான ஜப்பானின் கென்டோ மோமோட்டாவை எதிர்கொண்டார்.
காஷ்யப் முதல் செட்டை 13-21 என இழந்தார். இரண்டாவது செட்டிலும் ஜப்பான் வீரரின் ஆதிக்கம் தொடர்ந்தது. இதையடுத்து, 15-21 என்ற கணக்கில் காஷ்யப் தோல்வியடைந்து வெளியேறினார்.

