கபடி: அரியானாவை வீழ்த்தி ஐந்தாவது இடத்தில் உ.பி.

கபடி: அரியானாவை வீழ்த்தி ஐந்தாவது இடத்தில் உ.பி.

1 mins read

சண்டிகர்: ஏழாவது புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் அரியானாவின் பஞ்ச்குலாவில் நேற்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ், உ.பி. யோத்தா அணிகள் மோதின.

தொடக்கத்தில் இருந்தே உ.பி. யோத்தா அணி வீரர்கள் பொறுப்புடன் ஆடினர். இதனால் முதல் பாதி முடிவில் 15- 11 என்ற புள்ளிக் கணக்கில் உ.பி. யோத்தா முன்னிலை வகித்தது.

இரண்டாவது பாதியில் அரியானா அணி வீரர்கள் புள்ளிகளை எடுத்தாலும் அவர்களால் உ.பி.யோத்தா அணியினருக்கு ஈடுகொடுக்க முடியவில்லை.

இறுதியில், உ.பி. யோத்தா அணியினர் 37- 30 என்ற புள்ளிக் கணக்கில் அரியானாவை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

18வது ஆட்டத்தில் ஆடிய உ.பி.யோத்தா அணி பெற்ற 10வது வெற்றி இதுவாகும். அத்துடன் புள்ளிப் பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. 18வது ஆட்டத்தில் ஆடிய அரியானா அணி சந்தித்த 6வது தோல்வி இதுவாகும்.

மற்றோர் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணியை 50-21 என்ற கணக்கில் சுருட்டியது குஜராத் பார்ச்சுன் ஜெயண்ட்ஸ் அணி.