இபிஎல்: ஏமாற்றம் அளித்த மான்ெசஸ்டர் யுைனடெட்

இபிஎல்: ஏமாற்றம் அளித்த மான்ெசஸ்டர் யுைனடெட்

2 mins read
353a7199-d235-4404-aae7-bf625e5a93d2
மான்செஸ்டர் யுனைடெட்டுக்கும் ஆர்சனலுக்கும் இடையே ஓல்ட் டிராஃபர்ட்டில் ேநற்று அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில் யுனைடெட் குழுவுக்கு கிடைத்த 'ஃப்ரீ கிக்' வாய்ப்பை கோல் புகாமல் தடுக்கிறார் ஆர்சனல் கோல்காப்பாளர் பெர்ன்ட் லெனோ (நீல நிறச் சீருடையில்). படம்: ஏஎஃப்பி -

மான்செஸ்டர்: மான்செஸ்டர் யுனைடெட்டின் ஓல்ட் டிராஃபர்ட் மைதானத்தில் நேற்று அதிகாலை ஆர்சனலை எதிர்கொண்ட மான்செஸ்டர் யுனைடெட், தனது உப்புச் சப்பற்ற ஆட்டத்தையே தொடர்ந்தது பல ரசிகர்களை ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியுள்ளது.

ஆட்டத்தின் முதல் பாதி முடிவில் ஒரு கோல் ேபாட்டு மெத்தனமாகிய யுனைடெட் பின்னர் ஆர்சனலை சமன் செய்ய அனுமதித்தது.

யுனைடெட்டின் முதல் கோலை ஸ்காட் மிக்டோமினி போட்டு யுனைடெட் ரசிகர்களை மனம் குளிர வைத்தார். இரண்டாம் பாதி ஆட்டத்தை தொடங்கி கிட்டத்தட்ட 13 நிமிடங்களில் ஆர்சனல் குழு தனது பங்குக்கு ஒரு கோல் போட ஆட்டம் இறுதியில் 1-1 என முடிந்தது.

"ஒரு கோல் போட்டு முன்னிலை ெபற்றும் அடுத்த இரண்டாவது கோலை போட முடியாமல் தவித்தோம்.

"இதுவே தற்பொழுது எங்களுக்கு பாடமாக அைமந்துள்ளது. நாங்கள் புதிதாக ஒரு குழுவை அமைக்க முயற்சி செய்து வருகிறோம்.

"இந்தத் தருணத்தில் இரண்டாவது கோல் விழாதது ஏமாற்றமளிக்கிறது," என மான்செஸ்டர் யுனைடெட் நிர்வாகி சோல்சியார் புலம்பினார்.

ஆர்சனல் கோலை போட்ட ஒபமயாங், இதுவரை விளையாடிய எட்டு ஆட்டங்களில் எட்டு கோல்கள் போட்டு அசத்தியுள்ளதைக் குறிப்பிட்டுப் பேசிய சோல்சியார் அவரைப் போல் யுனைடெட் வீரர்களும் கோல் போடுவதில் திறமையைக் காட்ட வேண்டும் என்று தமது குழுவினருக்கு அறிவுரை வழங்கினார்.

இங்கிலிஷ் பிரிமியர் லீக் போட்டிகளில் இதுவரை விளையாடிய 12 ஆட்டங்களில் மான்செஸ்டர் யுனைடெட் இரண்டு ஆட்டங்களில்தான் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

லீக் பட்டியலில் முதல் நிலையில் இருக்கும் லிவர்பூல் குழுவுடன் ஒப்பிடுகையில் 12 புள்ளிகள் பின்தங்கி 10ஆம் நிலையில் உள்ளதும் இங்கு நினைவுகூரத்தக்கது.

இதற்கு நேர்மாறாக, ஆர்சனல் இதுவரை விளையாடிய ஆட்டங்களில் சிறப்பாகச் செய்துள்ளதால், நேற்றைய ஆட்டத்தில் கிடைத்த ஒரு புள்ளியுடன் பட்டியலில் நான்காம் நிலைக்கு முன்னேறியது.

இதற்கிடையே, முன்னாள் மான்செஸ்டர் யுனைெடட் வீரரான ராய் கீன், சோல்சியாருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

யுனைடெட் பல இளையர்களை இந்தப் பருவத்தில் அறிமுகம் செய்துள்ளதை குறிப்பிட்ட கீன், அவர்களை ஒரு சிறந்த குழுவாக உருவாக்குவதற்கு சோல்சியாருக்கு கால அவகாசம் தரப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.