எடுபடாத உத்திகளால் விடுபடாத சோகம்

எடுபடாத உத்திகளால் விடுபடாத சோகம்

1 mins read
84c7cf30-9173-4829-9520-04cc57b1f800
-

வார மத்தியில் நடந்த சாம்பியன்ஸ் லீக் காற்பந்து ஆட்டத்தில் ஜெர்மனியின் பயர்ன் மியூனிக்கிடம் ஏழு கோல்களை வாங்கி, பெரும் தலைக்குனிவைச் சந்தித்த டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் குழு நேற்றும் அவமானப்பட்டது. பிரிமியர் லீக் ஆட்டமொன்றில் பிரைட்டன் குழுவை எதிர்கொண்ட ஸ்பர்ஸ் 3-0 என்ற கோல் கணக்கில் தோற்றுப்போனது. 3வது நிமிடத்திலேயே கோலை விட்டுத்தந்ததுடன் கோல் காப்பாளர் ஹியூகோ லோரிஸ் 8வது நிமிடத்தில் காயமுற்று வெளியேறியதும் ஸ்பர்சுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியது. பிரைட்டனின் 2வது கோலை அடிக்கிறார் ஏரன் காணலி (இடது). படம்: ராய்ட்டர்ஸ்