காபூல்: ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி ஆட்டக்காரர்களுள் ஒருவர் முகம்மது நபி, 34. அண்மையில் டெஸ்ட் போட்டிகளில் ஓய்வை அறிவித்த அவர், ஒருநாள், டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடவுள்ளதாகவும் கூறினார். ஐபிஎல் போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் இவர் மாரடைப்பால் திடீரென மரணமடைந்துவிட்டார் என்ற தகவல் டுவிட்டர் சமூக ஊடகத்தில் தீயாகப் பரவியது. இதையடுத்து, உள்ளூர் போட்டியில் நபி பந்துவீசும் படத்தை ஆப்கான் கிரிக்கெட் சங்கம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டும்கூட அந்த வதந்தி அடங்கவில்லை. இதைத் தொடர்ந்து, "நான் இறந்து விட்டதாக வெளியான செய்தி பொய்யானது. நான் நலமாக இருக்கிறேன்," என்று தமது டுவிட்டர் பக்கம் வாயிலாக நபி தெளிவுபடுத்தியுள்ளார்.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் இறந்துவிட்டதாகப் பரவிய வதந்தி
1 mins read

