நேற்று முன்தினம் பிரைட்டன் குழு வுடன் நடைபெற்ற இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டத்தில் வலையை நோக்கி வந்த பந்தைத் தடுக்கும் முயற்சியில் டாட்டன்ஹம் ஹோட்ஸ்பர்ஸ் குழுவின் கோல் தற்காப்பாளர் ஹியுகோ லோரிஸ் கீழே விழுந்ததால், அவரது இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டு அவர் திடலை விட்டு தூக்கிச்செல் லப்பட்டார். அந்த ஆட்டத்தில் ஸ்பர்ஸ் குழு 3-0 என்ற கோல் கணக்கில் பிரைட்டன் குழுவிடம் தோல்வி கண் டது. இதற்கிடையே, லோரிசின் முழங் கையில் எலும்பு முறிவு ஏற்பட
வில்லை என்று ஸ்பர்ஸ் காற்பந்துச் சங்கம் நேற்று உறுதிப்படுத்தியது. காயத்தின் கடுமை குறித்தும் எவ்வ ளவு நாள் அவர் ஓய்வு எடுக்கக்கூடும் என்பது குறித்து வரும் வாரத்தில் முடிவெடுக்கப் படும் என்று அச்சங்கம் கூறியது.
லோரிஸ் ஆட்டத்துக்குத் திரும் பும் வரை இரண்டாம் நிலை கோல் தற்காப்பாளர் போலோ கசனிகா விளையாடுவார்.

