செனகல், நைஜீரியாவுடன் பொருதவுள்ள பிரேசில்

சிங்கப்பூரில் இரு நட்புமுறை ஆட்டங்களில் விளையாடுவதற்காக நெய்மார் உட்பட பிரேசில் காற்பந்துக் குழுவின் ஒரு சிலர் நேற்று சிங்கப்பூர் வந்தனர்.

ஐந்து முறை உலகக் கிண்ண வெற்றியாளரான பிரேசில், நாளை மறுதினம் செனகலுடனும் வரும் ஞாயிற்றுக்கிழமை நைஜீரியாவுடனும் தேசிய விளையாட்டரங்கில் மோதவுள்ளன.

பிரேசில் வீரர்களை வரவேற்க ஜேடபிள்யூ மாரியட் சிங்கப்பூர் சவுத் பிரிட்ஜ் ஹோட்டலுக்கு வெளியே திரண்டிருந்த வெறும் ஒன்பது காற்பந்து ரசிகர்கள், கிட்டத்தட்ட ஒரு மணிநேரமாக காத்திருந்தனர். நேற்று வார நாள் என்பதால் பலர் வேலைக்கும் பள்ளிக்கும் செல்ல வேண்டியிருப்பதால் அவர்களால் காற்பந்து நட்சத்திரங்களைச் சந்திக்க முடியாமல் போயிருக்கலாம் என அங்கிருந்த ரசிகர் ஒருவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் கூறினார்.

அவர்களை மகிழ்விக்கும் விதமாக நேற்று காலை 7.30 மணியளவில் நெய்மார், தியாகோ சில்வா உட்பட பிரேசில் வீரர்கள் சிலர் சிறிய வேன் ஒன்றிலிருந்து இறங்கினர்.

பிரெஞ்சுக் காற்பந்துக் குழுவுக்காக விளையாடிவரும் 27 வயது நெய்மார், கறுப்பு தொப்பி, வெள்ளை டீ-சட்டை, காக்கி காற்சட்டை, வைர நெக்லஸ் மற்றும் காதணிகளை அணிந்திருந்தார்.

வேனிலிருந்து வந்து இறங்கிய உடனேயே அக்கம் பக்கத்தைத் திரும்பிப் பார்த்த நெய்மார், பின்னர் ரசிகர்கள் காட்டிய சீருடைகளில் ‘ஆட்டோகிராஃப்’ கையெழுத்திட்டார்.

பின்னர் காலை 7.50 மணியளவில் இரண்டாம் தொகுதியாக லிவர்பூலின் ரொபேர்ட்டோ ஃபர்மினோ, ஃபெபின்யோ, எவர்ட்டனின் ரிச்சார்லிசன் ஆகியோர் வந்து இறங்கியபோது ரசிகர்களின் எண்ணிக்கை 15ஆக கூடியது.

வாகனத்திலிருந்து இறங்கிய வேகத்தில் ரிச்சார்லிசன் நேராக ஹோட்டலுக்கு உள்ளே புகுந்தபோதிலும், ஃபர்மினோவும் ஃபெபின்யோவும் ரசிகர்களோடு சற்று நேரம் செலவழித்தனர். ரசிகர்களோடு புகைப்படங்கள் எடுத்துக்கொண்ட அவர்கள், ஆட்டோகிராஃப் கையெழுத்தை வழங்கினர்.

கடைசியாக 2014ஆம் ஆண்டில் சிங்கப்பூருக்கு வந்திருந்த பிரேசில் காற்பந்துக் குழு, அப்போது 50,000க்கும் அதிகமான ரசிகர்கள் முன்னிலையில் தேசிய விளையாட்டரங்கில் நடைபெற்ற ஜப்பானுடனான நட்புமுறை ஆட்டத்தில் 4-0 எனும் கோல் கணக்கில் வென்றது.

23 வீரர்களைக் கொண்ட குழுவினரில் 11 பேர் மட்டுமே நேற்று சிங்கப்பூர் வந்த நிலையில், எஞ்சியவர்கள் இன்று வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று சிங்கப்பூர் வந்திறங்கிய வீரர்கள், காலாங் காற்பந்து மையத்தில் பயற்சி செய்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!