டி20 தொடரை வென்றது இலங்கை அணி

டி20 தொடரை வென்றது இலங்கை அணி

2 mins read

லாகூர்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் 35 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி நேற்று முன்தினம் வெற்றி பெற்றது. அதோடு, டி20 தொடரையும் அந்த அணி கைப்பற்றியது.

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, தலா மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் 2-0 என்ற புள்ளி கணக்கில் வென்றது.

அதையடுத்து இம்மாதம் 5ஆம் தேதி நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் இலங்கை அணி 64 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இரண்டாவது டி20 போட்டி நேற்று முன்

தினம் லாகூரில் நடைபெற்றது.

பூவா தலையாவில் வென்ற இலங்கை அணி முதலில் பந்தடிப்பைத் தேர்வு செய்தது. அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 182 ஓட்டங்களை அந்த அணி எடுத்தது.

இதில் சிறப்பாக விளையாடிய பனுகா ராஜபக்சே 48 பந்துகளில் 77 ஓட்டங்களைக் குவித்தார். பின்னர் 183 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. இந்த ஆட்டத்திலும் பாகிஸ்தான் அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. தொடக்க ஆட்டக்காரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

முடிவில், பாகிஸ்தான் அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் இரண்டு டி20 போட்டிகளில் வென்றதன் மூலம், இலங்கை அணி 2-0 என்ற புள்ளிக் கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.

இரு அணி-க-ளுக்-கி-டை-யி-லான கடைசி டி20 போட்டி இன்று நடை-பெ-றுகிறது.