முன்னாள் கிரிக்கெட் வீரரின் மகனைக் கரம்பிடிக்கும் சானியா மிர்சாவின் தங்கை

புதுடெல்லி: இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் இளைய சகோதரி ஆனம் மிர்சா, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் முகம்மது அசாருதீனின் மகனைத் திருமணம் செய்யவுள்ளது உறுதியாகியுள்ளது.

சானியாவின் சகோதரியும் ‘ஃபேஷன் ஸ்டைலிஸ்ட்’டுமான ஆனம் மிர்சா, கிரிக்கெட் வீரரான ஆசாத்தை திருமணம் செய்துகொள்ளப்போவதாக கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன. 

இந்நிலையில், சானியா மிர்சாவே இத்தகவலைத் தற்போது உறுதி செய்துள்ளார்.

இதுகுறித்து கருத்துரைத்த அவர், இருவருக்கும் இவ்வாண்டு டிசம்பர் மாதம் திருமணம் நடைபெறவுள்ளதாக தெரிவித்தார். 

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை சானியா திருமணம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.