நெதர்லாந்தின் அயக்ஸ், இத்தாலியின் யுவெண்டஸ், இன்டர் மிலான், ஏசி மிலான், ஸ்பெயினின் பார்சிலோனா, பிரான்சின் பிஎஸ்ஜி, இங்கிலாந்தின் மான்செஸ்டர் யுனைடெட் போன்ற முன்னணி ஐரோப்பியக் காற்பந்துக் குழுக்களுக்காக விளையாடி இருக்கும் சுவீடன் காற்பந்துப் பிரபலமான 38 வயது ஸ்லாட்டன் இப்ராஹிமோவிச்சிற்கு அவர் பிறந்த ஊரான மால்மோவில் முழு உருவச் சிலை வைக்கப்பட்டுள்ளது.
2.7 மீட்டர் உயரமும் 500 கிலோ எடையும் கொண்ட அந்தச் சிலையை ஸ்லாட்டனே நேற்று முன்தினம் திறந்து வைத்தார். ஐரோப்பாவின் முன்னணி லீக் பட்டங்களை 13 முறை வென்று உள்ள இவர், சுவீடனுக்காகவும் 116 போட்டிகளில் விளையாடி 62 கோல்களை அடித்துள்ளார். படம்: இபிஏ

