ஜகார்த்தா: மலேசியாவுக்கு எதிரான உலகக் கிண்ணக் காற்பந்து தகுதிச் சுற்று ஆட்டத்தின்போது பார்வையாளர்கள் வன்முறையில் ஈடுபட்டதால் இந்தோனீசியக் காற்பந்துச் சங்கத்திற்கு அனைத்துலகக் காற்பந்துக் கூட்டமைப்பு (ஃபிஃபா) 62,200 வெள்ளி அபராதம் விதித்துள்ளது. கடந்த மாதம் நடந்த அந்த ஆட்டத்தில் மலேசியா 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து, திடலில் இனியொரு வன்முறைச் சம்பவம் நிகழ்ந்துவிடக்கூடாது என முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அடுத்த வாரம் நடக்கவிருக்கும் வியட்னாமுக்கு எதிரான ஆட்டம் ஜகார்த்தாவில் இருந்து பாலிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்தோனீசியாவுக்கு ஃபிஃபா அபராதம்
1 mins read

