புனே: தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய வீரர் மயங்க் அகர்வால் தமது இரண்டாவது சதத்தை நேற்று பதிவு செய்தார்.
பூவா தலையாவில் வென்ற இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி, பந்தடிப்பைத் தேர்வு செய்தார். ரோகித் சர்மாவும் மயங்க் அகர்வாலும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
முதல் டெஸ்ட்டில் சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா, 14 ஓட்டங்களில் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய புஜாராவுக்கு மயங்க் அகர்வால் ஒத்துழைப்பு அளித்தார். இருவரும் சேர்ந்து ஓட்டங்களைக் குவித்தனர். அரை சதமடித்த புஜாரா 58 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
இரண்டாவது டெஸ்ட்டிலும் மயங்க் அகர்வால் பொறுப்புடன் ஆடி அசத்தினார். அவர் தமது இரண்டாவது சதத்தை பதிவு செய்தார். 108 ஓட்டங்களில் அவர் வெளியேறினார்.

