திருவனந்தபுரம்: ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வதே தமது லட்சியம் என்றும் அந்தப் போட்டிக்காக தாம் தயாராகி வருவதாகவும் இந்திய பூப்பந்து வீராங்கனை பி.வி.சிந்து கூறியுள்ளார்.
கேரள ஒலிம்பிக் சங்கத்தின் சார்பில் சிந்துவுக்கு திருவனந்தபுரத்தில் பாராட்டு விழா ஒன்று நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் சிந்து கலந்துகொண்டார்.
அதில் பேசிய அவர், "ரசிகர்களின் ஊக்கம் மற்றும் ஆசீர்வாதம் எனக்கு என்றும் முக்கியம்," என்றார்.
சென்னைக்கு சென்ற இந்திய பூப்பந்தாட்ட வீராங்கனை சிந்து ஆழ்வார்பேட்டையில், நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். நாட்டுக்கு பெருமை சேர்த்த சிந்துவை வரவேற்பது தனது கடமை எனவும் அவரது திறமையை இளையவர்களுக்கு கற்றுத் தரும் வகையில், இலவச பேட்மிண்டன் பயிற்சி மையம் ஒன்றை சென்னையில் தொடங்க வேண்டும் எனவும் கமல் கூறினார். படம்: ஊடகம்

