வலுவான நிலையில் பிரான்ஸ், துருக்கி குழுக்கள்

ரெய்க்ஜவிக்: யூரோ கிண்ணத் தகுதிச் சுற்று ஆட்டம் ஒன்றில் ஐஸ்லாந்துக் குழுவை 1-0 எனும் கோல் கணக்கில் உலகக் கிண்ண வெற்றியாளரான பிரான்ஸ் வென்றது. ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் பெனால்டி மூலம் கிடைத்த வாய்ப்பைப் கோலாக்கினார் செல்சி குழுவுக்காக விளையாடி வரும் ஒலிவியர் ஜிரூ. காயம் காரணமாக இந்த ஆட்டத்தில் பிரெஞ்சு வீரர்கள் பலர் களமிறங்காவிட்டாலும் இந்த ஆட்டத்தில் பிரான்ஸ் வென்றது. ‘எச்’ பிரிவில் இரண்டாவது நிலையில் பிரான்ஸ் உள்ளது. பட்டியலில் முதலிடம் வகிக்கும் துருக்கி, நேற்று அதிகாலை நடைபெற்ற மற்றோர் ஆட்டத்தில் அல்பேனியாவை 1-0 எனும் கோல் கணக்கில் வென்றது.

யூரோ தகுதிச் சுற்றில் வரும் செவ்வாய்க்கிழமை நடக்கவிருக்கும் விறுவிறுப்பான ஆட்டம் ஒன்றில் பிரான்ஸ், துருக்கி குழுக்கள் மோதவுள்ளன.

Loading...
Load next