உலான் உடே (ரஷ்யா): உலகக் குத்துச்சண்டை வெற்றியாளர் போட்டிகளில் இறுதிச் சுற்றில் இந்திய வீராங்கனை மஞ்சு ராணி தோல்விகண்டு, வெள்ளிப் பதக்கத்துடன் ஆறுதல் அடைந்தார்.
48 கிலோ எடைப் பிரிவின் இறுதிச் சுற்றில் அவர் ரஷ்ய வீராங்கனை எகதரீனா பல்ட்கேவா உடன் மோதினார். இதில் 1-4 என்ற புள்ளிக் கணக்கில் மஞ்சு ராணி தோற்றுப் போனார்.
முன்னதாக, மேரி கோம் (51 கிலோ), ஜமுனா போரோ (54 கிலோ), லவ்லினா போர்கோஹைன் (69) கிலோ என மேலும் மூன்று இந்திய வீராங்கனைகள் அரையிறுதி வரை முன்னேறினர். இருந்தாலும், இறுதிச் சுற்று வாய்ப்பை இழந்ததால் அந்த மூவருக்கும் வெண்கலப் பதக்கமே கிட்டியது.

