200 புள்ளிகளுடன் இந்தியா முதலிடம்

200 புள்ளிகளுடன் இந்தியா முதலிடம்

1 mins read

புனே: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 137 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்தியா 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. ஏற்கெனவே விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் டெஸ்ட்டில் 203 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. இந்த வெற்றி மூலம் பெற்ற 40 புள்ளிகளுடன் சேர்த்து இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. நான்கு டெஸ்ட்டுகளில் விளையாடி நான்கிலும் வெற்றி பெற்று 200 புள்ளிகள் பெற்று உள்ளது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2 டெஸ்ட்டுகளில் பெற்ற வெற்றி யால் 120 புள்ளிகள் கிடைத்தன.