யூரோ 2020 காற்பந்து தகுதிச் சுற்று: விளிம்பில் நிற்கும் வேல்ஸ்

கார்டிஃப்: யூரோ 2020 காற்பந்துப் போட்டிக்குத் தகுதி பெறும் வாய்ப்பு பறிபோகாதபடி குரோவேஷியாவுக்கு எதிரான ஆட்டத்தில் வேல்ஸ் பார்த்துக்கொண்டது.

நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் இரு குழுக்களும் தரப்புக்கு ஒரு கோல் போட்டு சமநிலை கண்டன.

இதனால் அடுத்த ஆண்டு நடைபெறும் யூரோ கிண்ணப் போட்டிக்கு வேல்ஸ் தகுதி பெறும் சாத்தியம் இருக்கிறது.

வேல்ஸ் தலைநகர் கார்டிஃபில் நடைபெற்ற இந்த ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்றது.

ஆட்டத்தின் 9வது நிமிடத்தில் நிக்கோலா விலாசிச் கோல் போட்டு குரோவேஷியாவை முன்னிலைக்குக் கொண்டு சென்றார்.

ஆனால் இடைவேளைக்கு சில வினாடிகள் எஞ்சியிருந்தபோது வேல்ஸ் குழுவின் நட்சத்திர வீரர் கேரத் பேல் கோல் போட்டு ஆட்டத்தைச் சமன்செய்தார்.

இரு குழுக்களும் வெற்றிக்குக் குறிவைத்து முனைப்புடன் விளையாடின. இதில் குரோவேஷியாவின் மூர்க்கத்தனமான ஆட்டம் காரணமாக வேல்ஸ் குழுவின் பல ஆட்டக்காரர்கள் காயமுற்றனர்.

ஆட்டம் சமநிலையில் முடிய இரு குழுக்களுக்கும் தலா ஒரு புள்ளி கிடைத்தது.

இதன் விளைவாக ‘இ’ பிரிவில் ஏழு ஆட்டங்களில் விளையாடி 14 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது குரோவேஷியா.

இரண்டாவது இடத்தில் ஹங்கேரி உள்ளது. அது குரோவேஷியாவைவிட இரண்டு புள்ளிகள் குறைவாகப் பெற்றுள்ளது.

நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் அசர்பைஜான் குழுவை 1-0 எனும் கோல் கணக்கில் ஹங்கேரி வீழ்த்தியது. மூன்றாவது இடத்தில் சிலோவாக்கியாவும் நான்காவது இடத்தில் வேல்சும் இருக்கின்றன.

மற்றோர் ஆட்டத்தில் பெலரூஸ் குழுவை 2-1 எனும் கோல் கணக்கில் ஹாலந்து தோற்கடித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!