மீண்டும் களமிறங்கும் சச்சின்

மீண்டும் களமிறங்கும் சச்சின்

1 mins read

மும்பை: கிரிக்கெட் உலகில் இருபது ஆண்டுகளுக்குமேல் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்து வந்த இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர், 46, மீண்டும் மட்டையுடன் களமிறங்கி, ரசிகர்களை மகிழ்விக்க இருக்கிறார்.

சாலைப் போக்குவரத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அடுத்த ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதியில் இருந்து 16ஆம் தேதி வரை மும்பையில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்குகொள்ளும் டி20 தொடர் நடைபெறவிருக்கிறது.

இதில், இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளின் 'லெஜண்ட்ஸ்' அணிகள் பங்குகொள்கின்றன.

'சாலைப் பாதுகாப்பு உலகத் தொடர்' என்ற இந்தப் போட்டித் தொடரில் சச்சின், லாரா, முரளிதரன், காலிஸ், பிரெட் லீ, சந்தர்பால் உள்ளிட்ட 100 முன்னாள் நட்சத்திரங்கள் பங்கேற்க இருப்பது உறுதியாகியுள்ளது.

2013ல் ஓய்வுபெற்ற சச்சின் நூறு சதங்களை விளாசிய முதல் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.