சிகாகோ: எதிராளி விட்ட குத்து மூளையைப் பதம் பார்க்க, சுய நினைவை இழந்து மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட பேட்ரிக் டே, 27 (படம்), எனும் இந்தக் குத்துச்சண்டை வீரர், நான்கு நாட்களுக்குப் பிறகு நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
சார்ல்ஸ் கான்வெல், 21, என்ற சக அமெரிக்கருடன் கடந்த சனிக்கிழமை நடந்த 'சூப்பர் வெல்ட்டர்வெய்ட்' போட்டியின் பத்தாவது சுற்றில் பேட்ரிக் டே காயமடைந்தார். டேயின் மரணச் செய்தி கான்வெலை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. "ஆட்டத்தில் வெல்லவே விரும்பினேனே தவிர இப்படி நடக்கும் என ஒருபோதும் நினைக்கவில்லை," என அவர் கூறினார்.

