பார்சிலோனா: காற்பந்து உலகில் 'எல் கிளாசிக்கோ' என அழைக்கப்படும் பார்சிலோனா-ரியால் மட்ரிட் குழுக்களுக்கு இடையே இம்மாதம் 26ஆம் தேதி நடக்கவிருந்த ஸ்பானிய லா லீகா ஆட்டம் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப் பட்டுள்ளது. ஸ்பெயினின் கட்டலோனியா வட்டாரத்தில் நடந்து வரும் போராட்டங்களே இதற்குக் காரணம். டிசம்பர் 6ஆம் தேதி அந்தப் போட்டி நடைபெறலாம் எனச் சொல்லப் படுகிறது.
பார்சா-ரியால் ஆட்டம் தள்ளிவைப்பு
1 mins read

