இஸ்லாமாபாத்: இலங்கை அணிக்கெதிராக சொந்த மண்ணில் நடந்த டி20 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் 3-0 எனத் தோற்றதையடுத்து, அவ்வணியின் தலைவர் பதவியிலிருந்து சர்ஃபராஸ் அகமது நீக்கப்பட்டுள்ளார். இனி டி20 போட்டிகளில் பாகிஸ்தான் அணியை இளம் வீரர் பாபர் ஆசம் வழிநடத்திச் செல்வார் என்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு அசார் அலி தலைமை தாங்குவார் என்றும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இருப்பினும், ஒருநாள் போட்டிகளில் அவ்வணியின் தலைவராக சர்ஃபராஸ் தொடர்ந்து நீடிப்பார். அடுத்த நவம்பர்-டிசம்பர் மாதங்களில் பாகிஸ்தான் அணி, ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் செய்யவுள்ளது.
பாகிஸ்தான் அணித் தலைவர் பதவியிலிருந்து சர்ஃபராஸ் நீக்கம்
1 mins read

