ரசிகர்களால் ரத்தான ஆட்டம்

ரசிகர்களால் ரத்தான ஆட்டம்

1 mins read

லண்டன்: தமது குழுவினர் இருவரின் இனத்தைக் குறித்து வசைபாடியதோடு, அவர்களை நோக்கி காறி உமிழ்ந்தும் அவமானப்படுத்த முயன்ற ரசிகர்களைக் கண்டித்து, ஒட்டுமொத்த குழுவினருமே ஆட்டத்தைப் புறக்கணித்த சம்பவம் இங்கிலாந்தில் நிகழ்ந்தது.

எஃப்ஏ கிண்ண ஆட்டம் ஒன்றில் ஹேரிங்கே பரோ - இயோவில் டௌன் குழுக்கள் நேற்று முன்தினம் மோதுவதாக இருந்தன. இந்த ஆட்டத்தில் பெனால்டி மூலம் கோலடித்து இயோவில் முன்னிலை பெற்றது.

இதனால் கோபமடைந்த ஹேரிங்கே குழு ரசிகர்கள் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதால் ஆட்டம் முடிய 25 நிமிடங்கள் இருந்தபோது அக்குழுவினர் திடலைவிட்டு வெளியேறினர். இதையடுத்து, ஆட்டம் ரத்தானதாக அறிவிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் குறித்து போலிசும் இங்கிலிஷ் காற்பந்துச் சங்கமும் விசாரித்து வருகின்றன.