அரையிறுதிக்குள் நுழைந்த வேல்ஸ்

அரையிறுதிக்குள் நுழைந்த வேல்ஸ்

1 mins read

தோக்கியோ: ஜப்பானில் நடந்து வரும் ரக்பி உலகக் கிண்ணத் தொடரின் அரை இறுதிச் சுற்றுக்கு வேல்ஸ் தகுதி பெற்றது. காலிறுதிப் போட்டியில் வேல்ஸ் 20-19 என்ற புள்ளிக் கணக்கில் பிரான்சைத் தோற்கடித்தது. ஒரு கட்டத்தில் 19-10 என பிரான்ஸ் முன்னிலையில் இருந்தது. அடுத்த வார இறுதியில் நடக்கவிருக்கும் அரையிறுதிப் போட்டிகளில் நியூசிலாந்து - இங்கிலாந்து, வேல்ஸ் - தென்னாப்பிரிக்கா அணிகள் பொருதவுள்ளன.