துபாய்: ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கிண்ணத் தகுதிச் சுற்றில் சிங்கப்பூர் அதன் இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
நேற்று மன்தினம் துபாயில் நடைபெற்ற ஆட்டத்தில் கடுமையான போராட்டத்துக்குப் பிறகு பெர்முடா அணியை சிங்கப்பூர் வீழ்த்தியது.
முதலில் பந்தடித்த பெர்முடா அணி, ஏழு விக்கெட் இழப்பிற்கு 149 ஓட்டங்களைச் சேர்த்தது.
150 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பந்தடித்த சிங்கப்பூர் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வாகை சூடியது.
சிங்கப்பூர் அணி அடுத்தாக நெதர்லாந்து, கென்யா, பாப்புவா நியூ கினி, நமிபியா ஆகிய குழுக்களை சந்திக்கும்.
உலகக் கிண்ணப் போட்டி அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது.

