கராச்சி: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சர்ஃபராஸ் அகமது பாகிஸ்தான் அணித் தலைவர் பதவியிலிருந்தும் டெஸ்ட், டி20 அணியிலிருந்தும் அண்மையில் நீக்கப்பட்டார்.
இந்நிலையில், அவர் எப்போது ஓய்வுபெறுவார் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது அவரது மனைவி கோபமடைந்தார்.
"என் கணவர் சர்ஃபராஸ் அகமது ஏன் இப்போது கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற வேண்டும்? அவருக்கு 32 வயதுதான் ஆகிறது. டோனிக்கு என்ன வயதாகிறது தெரியுமா? டோனி இன்னும் விளையாடி வருகிறார்தானே? என்னுடைய கணவர் இந்தச் சரிவிலிருந்து மீண்டு வருவார்," எனக் கொந்தளித்தார் குஷ்பாத் சர்ஃபராஸ் அகமது.

