பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றார் கங்குலி

பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றார் கங்குலி

1 mins read

மும்பை: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) 39வது தலைவராக இந்திய அணியின் முன்னாள் தலைவர் சௌரவ் கங்குலி பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.

மும்பையில் நேற்று நடைபெற்ற இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் அவர் பதவியேற்றார்.

அடுத்த ஒன்பது மாதங்களுக்கு கங்குலி பிசிசிஐக்கு தலைமை தாங்குவார்.

மேலும், உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மஹிம் வர்மா பிசிசிஐயின் புதிய துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா பிசிசிஐயின் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அவர்கள் இருவரும் நேற்று பதவியேற்றுக்கொண்டனர்.