கிரிக்கெட்: சிங்கப்பூரின் வெற்றிப் பயணம் தடைபட்டது

கிரிக்கெட்: சிங்கப்பூரின் வெற்றிப் பயணம் தடைபட்டது

1 mins read

துபாய்: உலகக் கிண்ண கிரிக்கெட் டி20 தகுதிச் சுற்று ஆட்டம் ஒன்றில் நேற்று முன்தினம் சிங்கப்பூர், நெதர்லாந்து அணிகள் பொருதின.

பூவா தலையாவில் வென்ற சிங்கப்பூர், பந்தடிப்பைத் தேர்வு செய்தது. 18.5 ஓவரில் சிங்கப்பூர் அணி 101 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.

அதையடுத்துக் களமிறங்கிய நெதர்லாந்து அணி, 21 பந்துகள் எஞ்சியிருந்த நிலையிலேயே 104 ஓட்டங்களை எடுத்து, ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிங்கப்பூரை வீழ்த்தியது.

முன்னதாக, ஸ்காட்லாந்து, பெர்முடா ஆகிய அணிகளை வென்று ரசிகர்களை மகிழ்வித்த சிங்கப்பூர் அணியின் வெற்றிப் பயணம், நெதர்லாந்துக்கு எதிரான தோல்வியுடன் முடிவுக்கு வந்தது.

நேற்றிரவு நடக்கவிருந்த அடுத்த ஆட்டத்தில் கென்ய அணியுடன் சிங்கப்பூர் பொருதவிருந்தது.