மீண்டும் வெற்றிப் பாதையில் லிவர்பூல்

மீண்டும் வெற்றிப் பாதையில் லிவர்பூல்

2 mins read
f00c6d5b-ec5d-4fae-a0ea-df9bb9653e00
நேற்றைய ஆட்டத்தில் கெங் வீரரை அனாயாசமாக தாண்டிச் சென்று கோல் போடும் லிவர்பூல் வீரர் சாடியோ மானே (சிவப்பு சீருடையில்). கெங் அணியின் ஆட்டமும் இதே கதியைத்தான் சந்தித்தது. படம்: இபிஏ -

பெல்ஜியம்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் போட்டி ஒன்றில் சென்ற வாரம் மான்செஸ்டர் யுைனடெட்டுடன் நடைபெற்ற போட்டியில் லிவர்பூலின் வெற்றிப் பயணம் தடுத்து நிறுத்தப்பட்டது.

அந்தப் போட்டியில் 1-1 என சமநிலை கண்ட லிவர்பூல் நேற்று அதிகாலை நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் காற்பந்து தகுதிச் சுற்றுப் போட்டியில் பெல்ஜியத்தின் கெங் அணியை 4-1 என புரட்டி எடுத்தது.

கடந்த காற்பந்துப் பருவத்தில் ஆக்ஸ்லேட் சேம்பர்லேனுக்கு கால் முட்டியில் காயம் ஏற்பட்டது. அதனால் விளையாடும் வாய்ப்பை இழந்த அவர் நேற்றைய ஆட்டத்தில் லிவர்பூலின் முதல் இரண்டு கோல்களையும் ஆட்டத்தின் 2, 57வது நிமிடங்களில் போட்டார்.

பின்னர், ஆட்டத்தின் 77, 87ஆம் நிமிடங்களில் சாடியோ மானே, முகமது சாலா இருவரும் தங்கள் பங்குக்கு ஆளுக்கு ஒரு கோல் போட்டு லிவர்பூல் ரசிகர்களுக்கு பெரு மகிழ்ச்சியை உண்டு பண்ணினர். இதைத் தொடர்ந்து கெங் அணியின் ஒடே என்பவர் தமது அணி சார்பாக ஒரு கோல் போட்டு ஆறுதலளித்தார்.

நாைள இரவு பிரிமியர் லீக்கில் ஸ்பர்ஸ் குழுவை எதிர்கொள்ளும் லிவர்பூலின் வெற்றி குறித்து கருத்துரைத்த ஆக்ஸ்லேட் சேம்பர்லேன், "இந்த ஆட்டம், மான்செஸ்டர் யுனைடெட்டுடன் ஞாயிறன்று நடைபெற்ற ஆட்டத்தின் கடைசி 20 நிமிடங்களில் மட்டும் என்றில்லாமல் இந்தப் பருவம் முழுக்கவும் எங்கள் தன்னம்பிக்கை வளர்ந்துள்ளது. நாங்கள் பல வழிகளில் எங்கள் ஆட்டத்தை ேமம்படுத்த வேண்டியிருந்தது தெரியவந்தது. அது இந்த ஆட்டத்திலும் தெரிந்தது.

"எனினும், இது எங்களுக்கு நல்ல பலனைத் தந்துள்ளது. அதை வரவேற்கிறோம். நாங்கள் எந்தெந்த வழிகளில் முன்னேற வேண்டியுள்ளது என்பதை எங்கள் அணியின் நிர்வாகி எடுததுக்கூறுவார்.

"எல்லாவற்றையும் சரிசெய்ய வேண்டும். அப்பொழுதுதான் வார இறுதியில் நடைபெறும் ஆட்டத்தில் வெற்றிபெற முடியும்," என்று விளக்கினார்.

மற்றோர் ஆட்டத்தில் நெதர்லாந்தின் அயக்ஸ் ஆம்ஸ்டர்டாம் குழுவை செல்சி 1-0 என்ற கோல் எண்ணிக்கையில் வெற்றி கொண்டது. செல்சியின் கோலை பட்சுஹாயி என்ற அதன் வீரர் ஆட்டத்தின் 86ஆம் நிமிடத்தில் போட்டு நெதர்லாந்து குழுவை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

சென்ற பருவத்தில் சாம்பியன்ஸ் லீக் போட்டியின் அரையிறுதிக்கு முன்னேறிய அயக்ஸ் குழுவுக்கு எதிராக மாற்று ஆட்டக்காரராகக் களமிறங்கிய பட்சுஹாயி கோல் போட்டது குறிப்பிடத்தக்கது.