உலகக் கிண்ண டி20 கிரிக்கெட் தகுதிச் சுற்று: பாப்புவா நியூ கினியிடம் சிங்கப்பூர் தோல்வி

உலகக் கிண்ண டி20 கிரிக்கெட் தகுதிச் சுற்று: பாப்புவா நியூ கினியிடம் சிங்கப்பூர் தோல்வி

1 mins read

துபாய்: உலகக் கிண்ண டி20 கிரிக்கெட் தகுதிச் சுற்று ஆட்டம் ஒன்றில் நேற்று சிங்கப்பூர், பாப்புவா நியூ கினி அணிகள் பொருதின.

பூவா தலையாவில் வென்ற சிங்கப்பூர், பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ஆட்டத்தில் 20 ஓவரில் நான்கு விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ஓட்டங்களை நியூ கினி குவித்தது. இதையடுத்து, 181 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் சிங்கப்பூர் களமிறங்கியது.

ஆனால், 20 ஓவரில் ஒன்பது விக்கெட்டுகள் இழப்பிற்கு சிங்கப்பூர் அணி 137 ஓட்டங்களை மட்டுமே எடுத்து தோல்வியுற்றது. இதனால், 43 ஓட்ட வித்தியாசத்தில் பாப்புவா நியூ கினி வெற்றி பெற்றது. இதற்கு முந்தைய தகுதிச் சுற்று ஆட்டத்தில் கென்ய அணியிடம் சிங்கப்பூர் தோல்வியுற்று இருந்தது.