ஓட்டங்கள் மட்டும் எடுக்க முடியவில்லை: வார்னர்

ஓட்டங்கள் மட்டும் எடுக்க முடியவில்லை: வார்னர்

1 mins read

மெல்பர்ன்: ஆஷஸ் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் கிடைக்கும் நம்பிக்கையில் உள்ளார் டேவிட்

வார்னர்.

"என் ஆட்டத்திறனில் எவ்வித குறையும் இல்லை. தற்போதைக்கு ஓட்டங்கள் மட்டும் எடுக்க முடியவில்லை," என்றார் வார்னர்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொடக்கப் பந்தடிப் பாளர் டேவிட் வார்னர். ஓராண்டு தடைக்குப்பின் மீண்டும் அனைத்துலகப் போட்டிகளில் விளையாடி வருகிறார்.

அண்மையில் முடிவடைந்த ஆஷஸ் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஐந்து டெஸ்ட் போட்டியிலும் அவரது சராசரி 9.50 ஆகும். இதனால் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் வார்னருக்கு இடம் கிடைக்குமா என்பது உறுதியாக தெரியவில்லை.

ஆனால் அணியில் இடம்பெறுவது குறித்து வார்னர் நம்பிக்கையுடன் இருக்கிறார்.

"பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டால் சிறப்பாக விளையாடு வேன் என்ற நம்பிக்கை உள்ளது.

"ஆஷஸ் தொடருக்குப்பின் கப்பாவில் சதம் அடித்துள்ளேன். என்னைப் பொறுத்த வரைக்கும் களம் இறங்கி தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதுதான் நோக்கம். என்னுடைய நம்பிக்கை எப்போதுமே உயர்வானதாகவே இருக்கும். என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் முதன்

முறையாக நெருக்கடிக்கு ஆளாகி ஓட்டங்கள் சேர்க்க முடியாமல் திணறியுள்ளேன். நாங்கள் சொந்த மண்ணுக்குத் திரும்பிய பின்னர், சில போட்டிகளில் ஓட்டங்கள் அடித்துள்ளேன்'' என்றார்.