மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் நேற்று முன்தினம் நடைபெற்ற எஃப்1 விரைவு கார் பந்தயத்தில் பிரிட்டிஷ் வீரர் லூவிஸ் ஹேமில்டன் வாகை சூடினார்.
எனினும், இப்போட்டியில் சக மெர்சிடிஸ் வீரர் வால்ட்டெரி போட்டாஸ் மூன்றாவது நிலையில் வந்ததால், தமது ஆறாவது உலக வெற்றியாளர் பட்டத்துக்காக ஹேமில்டன் சற்று காத்திருக்க நேரிடும்.
எஃப்1 போட்டிகளில் ஹேமில்டனுக்கு இது 83வது வெற்றியாகும். நான்கு முறை உலக வெற்றியாளரான ஃபெராரியின் செபாஸ்டியன் வெட்டல் இப்போட்டியில் இரண்டாவது நிலையில் வந்தார்.
மற்றொரு ஃபெராரி வீரர் சார்ல்ஸ் லெக்லர்க் நான்காவது இடத்தைப் பிடித்தார்.
அடுத்த வாரயிறுதியில் டெக்சஸ் நகரில் நடைபெற்றவுள்ள போட்டியில் வெற்றியாளர் பட்டத்தை ஹேமில்டன், 34, உறுதி செய்யக்கூடும்.

