பகல்-இரவு டெஸ்ட்: பிசிசிஐ முயற்சி

பகல்-இரவு டெஸ்ட்: பிசிசிஐ முயற்சி

1 mins read

புதுடெல்லி: பங்ளாதேஷ் அணி மூன்று டி20 மற்றும் 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளை யாடுவதற்காக நாளை இந்தியா வருகிறது.

இந்தியா-பங்ளாதேஷ் அணிகள் மோதும் முதல் டி20 ஆட்டம் நவம்பர் 3ஆம் தேதி டெல்லியில் நடக்கிறது. 2வது ஆட்டம் நவம்பர் 7ஆம் தேதி ராஜ்கோட்டிலும் 3வது ஆட்டம் 10ஆம் தேதி நாக்பூரிலும் நடக்கிறது.

முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 14ஆம் தேதி இந்தூரில் தொடங்கு கிறது. 2வது மற்றும் கடைசி டெஸ்ட் கோல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் 22ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், கோல்கத்தாவில் நடைபெறும் டெஸ்ட் போட்டியைப் பகல் இரவாக நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) திட்டமிட்டுள்ளது. பங்ளாதேஷிடம் பிசிசிஐ இது தொடர்பாக பரிந்துரை செய்துள்ளது. பங்ளாதேஷ் கிரிக்கெட் வாரியம் இதை ஏற்றுக்கொண்டால் இந்தியாவில் முதன்முறையாக பகல் இரவாக டெஸ்ட் போட்டி நடைபெறக்கூடும்.

பிசிசிஐ புதிய தலைவராக சௌரவ் கங்குலி பொறுப்பேற்ற பிறகு பகல்-இரவு டெஸ்ட் போட்டியைக் கொண்டுவர அவர் விரும்பினார். இதற்கு இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி ஆதரவு தெரிவித்ததாக கங்குலி அண்மையில் தெரிவித்தார். இதைத் தொடர்ந்துதான் கோல்கத்தா டெஸ்ட் போட்டியைப் பகல் இரவாக நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.