லிங்கன்: டி20 கிரிக்கெட் பயிற்சி ஆட்டத்தில் இங்கி லாந்து அணியை நியூசிலாந்து XI அணி துவம்சம் செய்தது.
முதலில் பந்தடித்த இங்கிலாந்து அணியில் ஜேம்ஸ் வின்ஸ் 46 ஓட்டங்களும் ஜோ டென்லி 39 ஓட்டங்களும் எடுக்க, மொத்தம் ஐந்து விக்கெட்டுகள் இழப்பிற்கு 188 ஓட்டங்களை அவ்வணி எடுத்தது. நட்சத்திர வீரர் ஆய்ன் மோர்கனை 12 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தார் நியூசிலாந்தின் தொடக்க வீரர் டாம் பேன்டன்.
பின்னர் ஆடிய நியூசிலாந்து அணி ஒன்பது பந்துகள் எஞ்சியிருக்க, எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைத் தன்வசமாக்கியது.
நியூசிலாந்தின் கொலின் மன்ரோ 57 பந்துகளில் 107 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக் காமல் இருந்தது இங்கிலாந்து மண்ணைக் கவ்வ முக்கிய காரணமாக இருந்தது.
கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய ஐந்து போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் இந்த அணிகள் மோதி வருகின்றன.
நியூசிலாந்தில் நடைபெறும் இத்தொடரில் இங்கிலாந்திற்கு இது இரண்டாவது தோல்வி.

