10வது முறையாக பட்டம் வென்றார் ஃபெடரர்

10வது முறையாக பட்டம் வென்றார் ஃபெடரர்

1 mins read

சுவிட்சர்லாந்து: சுவிஸ் உள்ளரங்க டென்னிஸ் பட்டத்தை அந்நாட்டின் ரோஜர் ஃபெடரர் பத்தாவது முறையாக கைப்பற்றியுள்ளார்.

சுவிட்சர்லாந்தின் பெசல் நகரில் நடைபெற்ற இந்தத் தொடரின் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில் 3ஆம் நிலை வீரரான ரோஜர் ஃபெடரர், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 20 வயதான அலெக்ஸ் டி மினாரை எதிர்த்து விளையாடினார்.

இதில் ஃபெடரர் 6-2, 6-2 என்ற நேர் செட்களில் எளிதாக வெற்றி பெற்று, பட்டம் வென்றார். சுவிஸ் உள்ளரங்க வெற்றியாளர் பட்டத்தை அவர் வென்றது இது பத்தாவது முறை.

மேலும் அனைத்துலகப் போட்டியில் அவர் வென்ற 103வது பட்டமாக இது அமைந்தது. பத்தாவது முறையாக பட்டம் வென்றது மறக்க முடியாத தருணம் என்றார் ஃபெடரர்.