ஸாக்கா மன்னிப்பு கேட்க ஆர்சனல் நிர்வாகி வலியுறுத்து

ஸாக்கா மன்னிப்பு கேட்க ஆர்சனல் நிர்வாகி வலியுறுத்து

1 mins read

லண்டன்: கடந்த வார இறுதியில் நடந்த கிரிஸ்டல் பேலஸ் - ஆர்சனல் குழுக்களுக்கு இடையிலான இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்து ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.

சொந்த அரங்கில் நடந்த ஆட்டத்திலும் வெற்றிபெற முடியாததால் ஏமாற்றமடைந்த ஆர்சனல் ரசிகர்கள், அக்குழுவின் தலைவரான சுவிஸ் ஆட்டக்காரர் கிரானிட் ஸாக்காவைக் கேலி செய்யும் விதமாக முழக்கம் எழுப்பினர்.

இதனால் வெறுத்துப்போன ஸாக்கா, பதிலுக்கு ரசிகர்களைக் கடுப்பேற்றும் வகையில் 'சரியாகக் கேட்கவில்லை' எனும் தொனியில் காதில் கையை வைத்துக் காட்டினார்.

இந்நிலையில், "ஸாக்கா தமது செய்கைக்கு ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும்," என்று ஆர்சனல் நிர்வாகி உனாய் எமெரி வலியுறுத்தியுள்ளார்.