பார்சிலோனா: நட்சத்திர காற்பந்து வீரர் லயனல் மெஸ்ஸி இரண்டு கோல்களை அடிக்க, ரியால் வேலடோலிட் குழுவிற்கு எதிரான ஸ்பானிய லா லீகா ஆட்டத்தில் பார்சிலோனா குழு 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம் மீண்டும் அக்குழு பட்டியலின் முதலிடத்திற்கு முன்னேறியது.
ஆட்டத்தின் 34வது நிமிடத்தில் கிடைத்த 'ஃபிரீ கிக்' வாய்ப்பைத் தவறவிடாது கோலாக்கினார் மெஸ்ஸி. அந்த வகையில், அவர் அடித்த 50வது கோல் இது.
இதுவரை 'ஃபிரீ கிக்' மூலம் பார்சிலோனாவுக்காக 44 கோல்களையும் அர்ஜெண்டினாவிற்காக ஆறு கோல்களையும் அவர் அடித்து இருக்கிறார்.
மெஸ்ஸியின் ஆட்டத்தைக் கண்டு அசந்துபோன சக பார்சிலோனா வீரர் விடால், "நாள்தோறும் மெஸ்ஸியை நாங்கள் பார்த்து வந்தாலும் தம்முடைய ஆட்டத்திறனால் அவர் எங்களை ஆச்சரியப்படுத்தி வருகிறார். அவர் வேற்றுக் கிரகத்திலிருந்து வந்தவர்," என்று மெச்சினார்.

