ஆஸ்திரேலிய அதிரடியில் திக்குமுக்காடிய இலங்கை அணி

ஆஸ்திரேலிய அதிரடியில் திக்குமுக்காடிய இலங்கை அணி

1 mins read
2d233501-ad4a-4e8b-a906-97d1d804d88b
ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டாக் வீசிய பந்து இலங்கையின் விக்கெட்டைப் பதம் பார்த்தது. இதன்மூலம் இலங்கையின் ஷேஹான் ஜெயசூர்யா (படம்) நடையைக் கட்டினார். படம்: ஏஎஃப்பி -

மெல்பர்ன்: மூன்றாவது டி20 போட்டியில் இலங்கையைப் புரட்டி எடுத்து 'ஒயிட்வாஷ்' செய்தது ஆஸ்திரேலியா.

மெல்பர்னில் நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் வார்னரின் அபார ஆட்டத்தால் ஆஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா-இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி மெல்பர்னில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

முதலில் பந்தடித்த இலங்கை 6 விக்கெட் இழப்பிற்கு 142 ஓட்டங்கள் எடுத்தது.

அந்த அணியின் பெரேரா அதிகபட்சமாக 57 ஓட்டங்கள் விளாசினார். ராஜபக்சே 17 ஓட்டங்களும் பெர்னாண்டோ 20 ஓட்டங்களும் சேர்த்தனர்.

பின்னர் 143 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா மீண்டும் பந்தடித்தது.

டேவிட் வார்னர் ஆட்டமிழக்காமல் 50 பந்துகளில் 57 ஓட்டங்கள் விளாச 17.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 145 ஓட்டங்கள் சேர்த்து அபார வெற்றி பெற்றது. ஏரோன் ஃபிஞ்ச் 25 பந்துகளில் 37 ஓட்டங்கள் எடுத்தார்.

ஏற்கெனவே முதல் இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றிருந்ததால் இலங்கை அணியை 3-0 என அது 'ஒயிட்வாஷ்' செய்தது.