கோலாலம்பூர்: மலேசியக் கிண்ண இறுதிப் போட்டியில் நேற்று கெடா காற்பந்துக் குழுவை 3-0 என வீழ்த்தியது சிங்கப்பூர் வீரர் ஹாரிஸ் ஹருண் தலைமையிலான ஜோகூர் டாருல் டக்சிம் குழு. லியான்ரோ வெலகுயிஸ், சபூவி ரஷித், சியாஃபிக் அகமது ஆகிய மூவரும் அந்த கோல்களைப் போட்டனர். கடந்த ஆறு ஆண்டுகளான ஜோகூர் டாருல் டக்சிம் குழுவிற்காக விளையாடி வரும் ஹாரிஸ்மலேசியக் கிண்ணத்தை வென்று இருப்பது இதுவே முதல் முறை. இதற்கு முன்னர், லீக் கிண்ணங்களை ஆறு முறையும் ஆசிய காற்பந்துக் கூட்டமைப்பு கிண்ணத்தையும் மலேசிய எஃப்ஏ கிண்ணத்தையும் அவர் வென்றுள்ளார்.
கைசேர்ந்த மலேசிய கிண்ணம்; மகிழ்ச்சியில் ஹாரிஸ் ஹருண்
1 mins read

