மூன்றாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி

மூன்றாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி

1 mins read
0748a7e1-e067-40f8-ba5b-42a5de0915a2
-

நெல்சன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டி20 கிரிக்கெட் போட்டியில் நேற்று நியூசிலாந்து அணி 14 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இங்கிலாந்து அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து அணி 21 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில், இரு அணிகள் மோதிய 3வது டி20 போட்டி நேற்று நடந்தது. நியூசிலாந்து அணி முதலில் பந்தடித்தது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 180 ஓட்டங்களைக் குவித்தது.

பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி, 20 ஓவரில் 7 விக்கெட்டு இழப்புக்கு 166 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. இதனால் நியூசிலாந்து அணி 14 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இங்கிலாந்து அணி தொடர்ந்து 2 ஆட்டங்களில் தோல்வியைத் தழுவியுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி டி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. நான்காவது ஆட்டம் நாளை மறுதினம் நேப்பியரில் நடைபெறுகிறது.