31வது பிறந்தநாளை கொண்டாடினார் கோஹ்லி

31வது பிறந்தநாளை கொண்டாடினார் கோஹ்லி

1 mins read
bcce1d24-59a6-46b5-8681-f271afa0a6e2
-

புதுடெல்லி: உலகின் தலைசிறந்த பந்தடிப்பாளர்களில் ஒருவராகத் திகழும் இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராத் கோஹ்லி (படம்) நேற்று தனது 31வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

இவருக்கு பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்திய அணியின் 3 நிலைக்கும் (டெஸ்ட், ஒருநாள் போட்டி, டி20) தலைவராக இருப்பவர் கோஹ்லி. கடந்த சில ஆண்டுகளாக இவர் அபாரமாக விளையாடி வருகிறார்.

பல்வேறு சாதனைகளைப் புரிந்து வேறு எந்த பந்தடிப்பாளரும் ஈடுகொடுக்க முடியாத அளவுக்கு உச்சத்தில் இருந்து வருகிறார்.

பந்தடிப்பில் மட்டுமல்லாமல் அணித் தலைவர் பதவியிலும் இவர் சிறப்பான நிலையில் இருக்கிறார்.

தற்போது பங்ளாதேஷுக்கு எதிரான டி20 தொடரில் இவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், அந்த அணிக்கு எதிரான 2 டெஸ்ட் தொடரில் கோஹ்லி விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது அவர் இந்திய அணியுடன் இணைந்துகொள்வார்.

பாலிவுட் நடிகையான மனைவி அனுஷ்கா சர்மாவுடன் கோஹ்லி இப்போது நேப்பாளத்தில் விடுமுறையைக் கழித்து வருகிறார்.

அங்குள்ள மக்களைச் சந்தித்து இத்தம்பதி தங்களது பொழுதை உல்லாசமாக கழித்து வருகின்றனர்.

அவரும் அனுஷ்காவும் 'டிரேக்கிங்' சென்றுள்ளனர். அப்பொழுது அங்குள்ளவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களைச் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் அனுஷ்கா.