திரங்கானுவில் ஃபாரிஸ் ரம்லி

சிங்கப்பூர் காற்பந்துக் குழுவின் நட்சத்திரத் தாக்குதல் ஆட்டக்காரர் ஃபாரிஸ் ரம்லி, மலேசிய சூப்பர் லீக்கில் பங்கேற்கும் திரங்கானு குழுவில் இணைந்துள்ளார்.

நடந்த முடிந்த மலேசிய சூப்பர் லீக் போட்டியில் திரங்கானு ஏழாவது இடத்தைப் பிடித்தது.

ஹவ்காங் யுனைடெட் குழுவுக்காக விளையாடிய ஃபாரிஸ்,  இவ்வாண்டுக்கான சிங்கப்பூர் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியின் ஆகச் சிறந்த ஆட்டக்காரர் விருதைக் கடந்த மாதம் 31வது தேதியன்று வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

லீக் பட்டியலில் ஹவ்காங் யுனைடெட் மூன்றாவது இடத்தைப் பிடித்தது. திரங்கானுவில் ஆசியான் ஆட்டக்காரருக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் கம்போடியாவின் தியேரி சந்தா பின்னுக்குப் பதிலாக ஃபாரிஸ் களமிறங்குவார் என்று தெரிவிக்கப்பட்டது.