மியூனிக்: ஜெர்மானிய லீக்கின் நடப்பு வெற்றியாளரான பயர்ன் மியூனிக் காற்பந்துக் குழு, இந்தப் பருவத்தில் தடுமாறி வருகிறது. புள்ளிப் பட்டியலில் நான்காம் நிலைக்கு இறங்கியதால் அதன் நிர்வாகி பதவியில் இருந்து நிக்கோ கோவச் கழற்றி விடப்பட்டார். இந்நிலையில், அப்பொறுப்பை ஏற்க ஆர்வமாக உள்ளதாக முன்னாள் ஆர்சனல் நிர்வாகி ஆர்சன் வெங்கர், பயர்ன் குழுவிடம் தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார். அதற்காக நன்றி தெரிவித்துக்கொண்ட போதும் இப்போது அவரது சேவை தங்களுக்குத் தேவை இல்லை என குழு நிர்வாகம் கைவிரித்துவிட்டது.
வெங்கர் வேண்டாம்: பயர்ன் கைவிரிப்பு
1 mins read

