மலான் சதத்தில் சமநிலை கண்ட தொடர்

நேப்பியர்: டேவிட் மலான் 51 பந்துகளில் 103 ஓட்டங்களை விளாச, நியூசிலாந்து அணிக்கெதிரான நான்காவது டி20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 76 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பந்தடித்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 241 ஓட்டங்களைக் குவித்தது. டி20 போட்டி ஒன்றில் அவ்வணி எடுத்த அதிகபட்ச ஓட்டங்கள் இதுதான். அணித்தலைவர் ஆய்ன் மோர்கனும் அதிரடியாக விளையாடி 41 பந்துகளில் 91 ஓட்டங்களை விளாசினார். மிகக் கடினமான இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணி 16.5 ஓவர்களில் எல்லா விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 165 ஓட்டங்களை மட்டும் தோற்றது. இதன்மூலம் 2-2 என்ற கணக்கில் தொடர் சமநிலைக்கு வர, ஐந்தாவது, கடைசி போட்டி நாளை நடக்கிறது.