கங்குலி: ரிஷப் பன்டுக்கு அவகாசம் தேவை

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட்காப்பாளர் ரிஷப் பன்ட் மீண்டும் தனது ஆட்டத்திறனை வெளிப்படுத்த சிறிது அவகாசம் தர வேண்டும் என பிசிசிஐ தலைவா் சௌரவ் கங்குலி கூறியுள்ளாா்.

மூத்த வீரா் எம்.எஸ்.டோனியின் வாரிசாக கருதப்படும் 21 வயது ரிஷப் பன்ட், கடந்த சில மாதங்

களாக அனைத்துலக கிரிக்கெட் போட்டியில் சரிவர ஆடவில்லை. பந்தடிப்பு, விக்கெட் காப்பு பிரிவு இரண்டிலும் அவர் சொதப்பி வருகிறாா். இது அவருக்கு அணியில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், மற்றோர் இளம் விக்கெட் காப்பாளரான சஞ்சு சாம்சனும் அணியில் சோ்க்கப்பட்டுள்ளாா். டெஸ்ட் ஆட்டத்தில் விருத்திமான் சாஹா இடம்பெற்றுள்ளார். இனிவரும் ஆட்டங்களில் பன்ட் சரிவர ஆடாவிட்டால் அணியில் அவரது இடம் கேள்விக்குறியாகிவிடும் என பலா் விமா்சித்துள்ளனா்.

இதுதொடா்பாக கங்குலி நேற்று முன்தினம் கூறியதாவது, “சிறந்த வீரராகத் திகழ்கிறாா் பன்ட். அவா் மீண்டும் சிறந்த ஆட்டத்திறனை வெளிப்படுத்த அவகாசம் தேவை. அனைத்துலக கிரிக்கெட் தரும் அழுத்தங்களை எதிா்கொள்ள பன்ட்டுக்கு மேலும் முதிா்ச்சி தேவைப்படுகிறது. அவருக்கு தேவையான அவகாசம் தரப்பட்டால், மீண்டும் அவா் சிறப்பாக ஆடுவாா்,” என்றாா்.

பந்தடிப்பு, விக்கெட் காப்பு இரண்டிலும் ஈடுபடும்போது நிலைமையை எளிதாக கையாள வேண்டும் என பன்டுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஏழு ஓட்டங்களை மட்டும் விட்டுத் தந்து ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி அனைத்துலக டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஆகச் சிறந்த பந்துவீச்சைப் பதிவுசெய்த தீபக் சாஹர். படம்: ஏஎஃப்பி

12 Nov 2019

‘ஹாட்ரிக்’குடன் தீபக் சாஹர் உலக சாதனை

தனக்குப் பதிலாக டிபாலா களமிறக்கப்பட்டபோது இறுக்கமான முகத்துடன் வெளியேறிய  ரொனால்டோ. படம்: ராய்ட்டர்ஸ்

12 Nov 2019

மாற்று வீரரைக் களமிறக்கியதால் ரொனால்டோ அதிருப்தி

லிவர்பூல் குழுவின் இரண்டாவது கோலை அடிக்கும் முகம்மது சாலா (இடது). படம்: ராய்ட்டர்ஸ்

12 Nov 2019

முதலிடத்தை வலுப்படுத்திக்கொண்ட லிவர்பூல்