யர்கன்: எனக்கு நெருக்கடி இல்லை

லிவர்பூல்: லிவர்பூல் காற்பந்துக் குழுவின் முதல் குழு உலகக் கிண்ணத்தை அடுத்த மாதம் வெல்வதன் தொடர்பில் எவ்வித நெருக்கடியையும் தாம் உணரவில்லை என அக்குழுவின் நிர்வாகி யர்கன் கிளோப் தெரிவித்துள்ளார்.

எனினும், கத்தாரில் நடை

பெறும் இப்போட்டி கடுமையாக இருக்கும் எனத் தாம் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இப்போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்குள் லிவர்பூல் நுழைகிறது. ஏழு குழுக்கள் பொருதும் இப்போட்டியில் தான் முன்பின் சந்திக்காத குழுக்களுடன் ஐரோப்பிய வெற்றியாளரான லிவர்பூல் விளையாடக்கூடும் என அவர் சொன்னார்.

அதுவும், வெவ்வேறு போட்டிகளில் லிவர்பூலுக்கு அடுத்தடுத்து முக்கிய ஆட்டங்கள் இருப்பதால் வீரர்கள் சோர்வடையாமல் பார்த்துக்கொள்வது மிகவும் முக்கியம் என்றார் அவர்.

இம்மாதம் 23ஆம் தேதிக்கும் அடுத்த ஆண்டு ஜனவரி 2ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் நான்கு போட்டிகளில் 12 ஆட்டங்களில் லிவர்பூல் விளையாடுகிறது.

எனினும், குழு உலகக் கிண்ணப் போட்டியைத் தாம் மெத்தனமாக எடுத்துக்கொள்ள போவதில்லை என கிளோப் கூறினார்.

“லிவர்பூலுடன் சேர்ந்து குழு உலகக் கிண்ணப் போட்டியை வெல்லும் முதல் நிர்வாகியாக நான்தான் இருக்க வேண்டும் என்ற அவா எனக்குக் கிடையாது. எனினும், இப்போட்டியில் எமது வீரர்கள் விளையாடவுள்ள நிலையில், எங்களிடம் உள்ள வளங்களைக் கொண்டு எங்களால் முடிந்தவற்றைச் செய்வோம்.

“இதுவரை எனக்கு எவ்வித நெருக்கடியும் கிடையாது. இப்போட்டியை நான் வாய்ப்பாகத்தான் கருதுகிறேன். உலகின் மற்ற கண்டங்களைச் சேர்ந்த குழுக்களுடன் விளையாடுவது சுவாரசியமாகவும் கடினமாகவும் இருக்கும்,” என்றார் கிளோப்.

அடுத்த மாதம் 11ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை இப்போட்டி நடைபெறுகிறது.

“எப்போதும்போல இந்தப் போட்டிக்கும் நாங்கள் ஆயத்தமாகுவோம். பிரேசிலிய, அர்ஜெண்டின, மெக்சிகோ அல்லது அரேபிய காற்பந்து பற்றி எனக்கு அதிகம் தெரியாது. ஆனால், போட்டி கடுமையாக இருக்கும் என்பது மட்டும் உறுதி,” என்று கிளோப் கூறினார்.

கடந்த ஜூன் மாதம் சாம்பியன்ஸ் லீக் போட்டியின் இறுதிச் சுற்றில் டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் குழுவை 2-0 எனும் கோல் கணக்கில் லிவர்பூல் வீழ்த்தியிருந்தது. அதையடுத்து, யூரோப்பா லீக் வெற்றியாளரான செல்சி குழுவை 5-4 எனும் கோல் கணக்கில் பெனால்டியில் தோற்கடித்து சூப்பர் கிண்ணத்தை லிவர்பூல் ஏந்தியது.

நடப்பு இங்கிலிஷ் பிரிமியர் லீக் பட்டியலில் இரண்டாம் நிலையில் உள்ள லெஸ்டர் சிட்டியைவிட எட்டுப் புள்ளிகள் அதிகம் பெற்று முதலிடத்தை லிவர்பூல் வலுவாக்கிக்கொண்டுள்ளது.

தற்போதைய ஆட்டத்திறனை லிவர்பூல் வீரர்கள் தொடர்ந்து வெளிப்படுத்தினால் 30 ஆண்டுகளில் முதன்முறையாக பிரிமியர் லீக் கிண்ணத்தை அக்குழுவால் வெல்ல முடியும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!