கராச்சி: பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் இளம் வீரரான நசீம் ஷாவின் தாயார் நேற்று முன்தினம் இரவு மரணம் அடைந்ததால் அந்த அணியின் வீரர்கள் கையில் கறுப்புப் பட்டை அணிந்து விளையாடினர்.
பாகிஸ்தான் - ஆஸ்திரேலிய 'ஏ' அணிகளுக்கு இடையில் பயிற்சி ஆட்டம் நடைபெற்று வருகிறது.
பகல்-இரவு போட்டியான இந்த ஆட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று 2வது நாள் ஆட்டம் நடைபெற்றது.
பாகிஸ்தான் அணியில் 16 வயதே ஆன நசீம் ஷா இடம் பிடித்திருந்தார். அவரது தாயார் திடீரென மரணம் அடைந்த நிலையில், நேற்றைய போட்டியின்போது இரண்டு அணி வீரர்களும் தங்களது இரங்கலைத் தெரிவிக்கும் கையில் கறுப்புப் பட்டை அணிந்து விளையாடினர்.

