இளஞ்சிவப்பு பந்தில் பயிற்சி செய்யும் இந்திய அணி வீரர்கள்

இளஞ்சிவப்பு பந்தில் பயிற்சி செய்யும் இந்திய அணி வீரர்கள்

1 mins read
e5cf363c-92e9-419c-914d-5db2222c4482
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியை முன்னிட்டு பயிற்சியில் ஈடுபடும் பங்ளாதேஷ் அணி வீரர்கள். படம்: ஏஎஃப்பி -

இந்தூர்: கோல்கத்தாவின் ஈடன் கார்டனில் நடைபெறவிருக்கும் பகல்-இரவு டெஸ்ட் போட்டிக்கு தயாராகும் வகையில் இந்தூரில் இந்திய வீரர்கள் இரவுப் பயிற்சி செய்து வருகிறார்கள்.

இந்தியா-பங்ளாதேஷ் அணி

களுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் இந்தூரில் நாளை தொடங்குகிறது. கடந்த 10ஆம் தேதி இரு அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் முடிவடைந்த நிலையில், டெஸ்ட் போட்டிக்காக இந்திய அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

கோல்கத்தாவில் இம்மாதம் 22ஆம் தேதி தொடங்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டி பகல்-இரவாக நடக்கிறது. இரு டெஸ்ட் போட்டிகளுக்கும் இடையிலான இடைவெளி மிகக்குறைவாக இருப்பதால் இந்தூரிலேயே இளஞ்சிவப்பு நிற பந்தில் பயிற்சி எடுக்க இந்திய அணி விரும்பியது.

அதன்படி மாலை 5 மணி முதல் 6 மணி வரை வெளிச்சத்திற்குக் கீழ் வீரர்கள் பயிற்சி செய்ய வேண்டும்.

இதற்கிடையே, பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் விளையாட தாம் ஆர்வமாக இருப்பதாக இந்திய அணி வீரர் புஜாரா தெரிவித்துள்ளார்.