ஆதிக்கத்தைத் தொடர இந்தியா முனைப்பு

இந்தூர்: டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணியை அதன் சொந்த மண்ணிலேயே இன்று எதிர்கொள்கிறது பங்ளாதேஷ் கிரிக்கெட் அணி.

2012 டிசம்பரில் இங்கிலாந்து அணியிடம் தோற்ற பிறகு கடந்த ஏழு ஆண்டுகளாக இந்தியாவில் நடந்த டெஸ்ட் தொடர்களில் இந்திய அணியை எந்த ஓர் அணியாலும் வெற்றிகொள்ள முடிந்ததில்லை. அதிலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்திய அணி சொந்த மண்ணில் ஆடிய 26 டெஸ்ட் போட்டிகளில் 20 போட்டிகளில் வென்றுள்ளது; ஒரு போட்டியில் மட்டுமே தோற்றுள்ளது.

இப்படி, அசுர பலத்துடன் இந்திய அணி இருக்கும் நிலையில், ஷாகிப் அல் ஹசன், தமீம் இக்பால் என இரு முக்கிய வீரர்கள் இல்லாமல் எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு பங்ளாதேஷ் அணி தள்ளப்பட்டுள்ளது.

இந்திய ஆடுகளங்கள் பெரும்பாலும் சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமாக இருக்கும். அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ் இருப்பது அணிக்குப் பெரும் பலம். இதனிடையே, முகம்மது ஷமி, உமேஷ் யாதவ் என வேகப் பந்துவீச்சாளர்களும் உத்வேகத்துடன் பந்துவீசி, விக்கெட்டுகளை அள்ளிவருவதால் இந்திய அணி அசைக்க முடியாத அணியாகத் திகழ்ந்து வருகிறது. அண்மையில் இந்தியா சென்ற தென்னாப்பிரிக்க அணி இந்தியப் பந்துவீச்சில் சிக்கி, சின்னபின்னமானதே இதற்குச் சான்று.

அதேபோல, பந்தடிப்பிலும் இந்திய அணி வலுவாக இருக்கிறது. டெஸ்ட் அணிக்குத் திரும்பி, தொடக்க வீரராகக் களமிறங்கி வரும் ரோகித் சர்மா அற்புதமான ஆட்டத்திறனுடன் காணப்படுகிறார். இளம் வீரரான மயங்க் அகர்வாலும் தென்னாப்பிரிக்க அணிக்கெதிராக இரட்டைச் சதம் விளாசி, தனது திறமையை நிரூபித்தார்.

ஆகையால், புதிய தலைவரான மொமினுல் ஹக்கின்கீழ் களமிறங்கும் பங்ளாதேஷ் அணிக்கு மிகப் பெரிய சவால் காத்திருக்கிறது என்பது நிச்சயம்.

இவ்விரு அணிகளும் இதுவரை ஒன்பது டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளன. அதில் இந்திய அணி ஏழு போட்டிகளில் வென்றுள்ளது; இரு போட்டிகள் ‘டிரா’வில் முடிந்தன.

இன்னொரு மைல்கல்லை நெருங்கும் அஸ்வின் இன்றைய போட்டியில் ஒரே ஒரு விக்கெட்டைக் கைப்பற்றும் பட்சத்தில், சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் 250 விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது வீரர் எனும் சாதனையைப் படைப்பார் அஸ்வின். அனில் கும்ளே (350), ஹர்பஜன் சிங் (265) ஆகியோர் முதலிரு இடங்களில் உள்ளனர்.

ஒட்டுமொத்தத்தில், கும்ளே 619 விக்கெட்டுகளையும் ஹர்பஜன் சிங் 417 விக்கெட்டுகளையும் வீழ்த்தி உள்ளனர். அஸ்வின் இதுவரை 357 விக்கெட்டுகளைக் கைப்பற்றிஇருக்கிறார்.

அணி விவரம்

இந்தியா: விராத் கோஹ்லி (அணித்தலைவர்), ரோகித் சர்மா, மயங்க் அகர்வால், சேத்தேஸ்வர் புஜாரா, அஜின்கிய ரகானே, ஹனுமா விஹாரி, ரித்திமான் சாஹா (விக்கெட்காப்பாளர்), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப் யாதவ், முகம்மது ஷமி, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, ஷுப்மன் கில், ரிஷப் பன்ட்.

பங்ளாதேஷ்: மொமினுல் ஹக் (அணித்தலைவர்), அபு ஜாயேத், அல் அமின் ஹொசைன், இபாதத் ஹொசைன், இம்ருல் கேயஸ், லிட்டன் தாஸ், மஹ்முதுல்லா, மெஹதி ஹசன், முகம்மது மிதுன், மொசாடெக் ஹொசைன், ம்ஷ்ஃபிக்ர் ரஹீம், முஸ்தஃபிசுர் ரஹ்மான், நயீம் ஹசன், சைஃப் ஹசன், ஷத்மான் இஸ்லாம், தைஜுல் இஸ்லாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!