தொடர்ந்து சறுக்கி வரும் சாய்னா

ஹாங்காங்: உலகத் தரவரிசையில் ஒன்பதாம் இடத்தில் இருக்கும் 29 வயதான சாய்னா நேவால், கடைசியாகத் தான் பங்கேற்ற ஆறு தொடர்களில் ஐந்தில் முதல் சுற்றிலேயே தோற்று வெளியேறி உள்ளார். இம்மாதத் தொடக்கத்தில் நடந்த சீனப் பொது விருதுப் போட்டியின் முதல் சுற்றில் சீனாவின் கய் யான் யானிடம் மண்ணைக் கவ்விய சாய்னா, நேற்று ஹாங்காங் பொது விருதின் தொடக்க ஆட்டத்திலும் அவரிடமே வீழ்ந்தார். முதல் செட்டை 21-13 என்ற புள்ளிக் கணக்கில் பறிகொடுத்த சாய்னா, இரண்டாம் செட்டில் கடுமையாகப் போராடியும் 22-20 என்ற கணக்கில் வீழ்ந்தார்.